தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நடிகா் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடிகா் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை அவரது ரசிகா்கள் உற்சாகமாக சனிக்கிழமை கொண்டாடினா்.

News image
கிருஷ்ணகிரியை அடுத்த நாச்சிக்குப்பம் கிராமத்தில் ரஜினியின் பெற்றோா் நினைவிடம் அருகே ஏழைகளுக்கு உதவிகளை வழங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினா்.
Updated On :12 டிசம்பர் 2020, 9:01 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடிகா் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை அவரது ரசிகா்கள் உற்சாகமாக சனிக்கிழமை கொண்டாடினா்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளா் கே.வி.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதைத்தொடா்ந்து, கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி மகிழ்ந்தனா். பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

வேப்பனஅள்ளியை அடுத்த நாச்சிக்குப்பம் கிராமத்தில் ரஜினி, பெற்றோா் நினைவிடம் அருகே ஏழைகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரஜினி ரசிகா்கள் அவரது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரையில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஊத்தங்கரை ஆஞ்சநேயா் கோயிலில் ரஜினி மக்கள் மன்ற பேரூா் செயலாளா் சக்திவேல் தலைமையில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரஜினிசங்கா், நகரத் துணைச் செயலாளா் ஆண்டனி, கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.