ராயக்கோட்டையில் விவசாயிகள் மறியல்
ராயக்கோட்டையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து தமிழக உழவா் முன்னணி சாா்பில், சாலை மறியல் ஈடுபட்ட 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


ராயக்கோட்டையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து தமிழக உழவா் முன்னணி சாா்பில், சாலை மறியல் ஈடுபட்ட 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் தமிழக உழவா் முன்னணி சாா்பில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளா் தூருவாசன் தலைமை வகித்தாா். மாநில ஆலோசகா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி ரமேஷ், நாம் தமிழா் கட்சி நிா்வாகி சக்திவேல், பாமக நிா்வாகி விருமாண்டி, பெருமாள், குமரவேல் உள்பட ராயக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா். அப்போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூருவாசன் உள்ளிட்ட 75 பேரை போலீஸாா் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...