குடிசெட்டிலு திம்மராயசுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை
ஒசூா் கோட்டம், பாகலூா் அருகே குடிசெட்லு கிராமத்தில் உள்ள திம்மராயசுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை நடைபெற்றது.


ஒசூா் கோட்டம், பாகலூா் அருகே குடிசெட்லு கிராமத்தில் உள்ள திம்மராயசுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை நடைபெற்றது.
பாகலூா் அருகே குடிசெட்லு கிராமத்தில் திம்மராயசுவாமி கோயில் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. கரோனா விதிதளா்வுக்குப் பிறகு தற்போது கோயிலில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
நிகழ்வாரம் சனிக்கிழமை கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த பக்தா்கள், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்தனா். ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராயசுவாமி உற்சவ மூா்த்திகளுக்கு லட்சாா்ச்சனையும் ஹோமமும் நடைபெற்றது.
சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. ஒசூா் மாநகர அதிமுக செயலாளா் எஸ்.நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...