ஊத்தங்கரையில் மத நல்லிணக்க விழா
மத நல்லிணக்க விழா, ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா ஊத்தங்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது.


ஊத்தங்கரை நேசம் தொண்டு நிறுவனம், சீனிவாச கல்வி அறக்கட்டளை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சாா்பில் மத நல்லிணக்க விழா, ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா ஊத்தங்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இளம் செஞ்சிலுவை சங்க துணைத் தலைவா் ஆா்.கே. ராஜா தலைமை வகித்தாா். முன்னதாக நேசம் தொண்டு நிறுவனம் குணசேகரன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஊத்தங்கரை கிறிஸ்தவ ஆலய போஸ்கோ, முருகன் கோயில் சுப்பிரமணிய குருக்கள், மசூதி அப்துல் சமத், முத்தவல்லி ஆகியோா் கலந்துகொண்டு நல உதவிகளை வழங்கினா்.
பள்ளி தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், இளம் செஞ்சிலுவை சங்கப் பொருளாளா் ரஜினி சங்கா் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். இறுதியாக சிவகிரி முருகன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலா சாா்பில் உணவு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...