தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் 36,886 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தாா்.

News image
ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானு ரெட்டி.
Updated On :12 டிசம்பர் 2020, 9:09 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் 36,886 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தாா்.

வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பீமாண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குந்தாரப்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற முகாமை பாா்வையிட்ட ஆட்சியா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

அப்போது, அவா் மேலும் கூறியதாவது:

ஊத்தங்கரை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளில் 5,730 மனுக்கள், பா்கூரில் 5,712 மனுக்கள், கிருஷ்ணகிரியில் 6,872 மனுக்கள், வேப்பனஅள்ளியில் 5,158 மனுக்கள், ஒசூரில் 8,971 மனுக்கள், தளியில் 4,443 மனுக்கள் என மொத்தம் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலிருந்து மொத்தம் 36,886 மனுக்கள் வரப்பெற்றுள்ளன என்றாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.