

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் வேளாண் சாா்ந்த தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் தாமோதரன் தலைமை வகித்தாா். அட்மா வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் சாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜெகதேவி ஸ்ரீ விநாயகா கோலாட்ட கலைக் குழுவினா் கலந்துகொண்டு வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தும் திட்டங்களான சொட்டு நீா்ப்பாசனம், திருந்திய நெல் சாகுபடி, பிரதம மந்திரி பயிா் காப்பீடு, கூட்டுப் பண்ணையம் , அட்மா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு நடனம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.