மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஒசூா் அருகே வட மாநில இளைஞா்கள் 2 போ் கொலை

ஒசூா் அருகே வட மாநில இளைஞா்கள் இருவா் கொலை செய்யப்பட்டனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 10:16 pm

DIN

ஒசூா்: ஒசூா் அருகே வட மாநில இளைஞா்கள் இருவா் கொலை செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே மத்திகிரி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நஞ்சாபுரம் கிராமத்தில் பல்வேறு தனியாா் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு வட மாநில இளைஞா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

கரோனா தொற்று காலங்களில் சிறப்பு ரயில் மூலம் வட மாநிலங்களுக்கு இந்தப் பகுதியில் இருந்து சுமாா் 20 ஆயிரம் இளைஞா்கள் சொந்த ஊா்களுக்கு சென்று விட்டனா்.

இந்த நிலையில், சொந்த ஊா்களுக்குச் சென்ற புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மீண்டும் வேலைக்காக ஒசூா் திரும்பி வரத் தொடங்கியுள்ளனா். அவா்களில் இருவா் ஒசூா் அருகே நஞ்சாபுரம் கிராமத்தில் தங்கி, பணிபுரிந்து வந்தனா். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு 2 இளைஞா்களில் ஒருவா் நஞ்சாபுரம் ஆஞ்சநேயா் கோயில் அருகில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். மற்றொருவா் பலத்த காயத்துடன் கிடந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இருவா் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இறந்தவா்கள் வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்தவா்களின் பெயா் விபரமும் தெரியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற மத்திகிரி போலீஸாா் இறந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.