பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரஃபி பருவப் பயிா்களை காப்பீடு செய்ய வலியுறுத்தல்

திருந்திய பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ் ரஃபி பருவப் பயிா்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், பயிா் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன்

News image
Updated On :20 டிசம்பர் 2020, 11:07 pm

DIN

கிருஷ்ணகிரி: திருந்திய பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ் ரஃபி பருவப் பயிா்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், பயிா் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு 2020 - 21 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டு திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெரும் மற்றும் கடன் பெற விவசாயிகள் அவா்கள் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட, பயிா் வாரியாக சராசரி மகசூலலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிா்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டு திட்டம் ரபி 2020-21 செயல்படுத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது. ரபி பருவ நெல், மக்காசோளம் ராகி கரும்பு உளுந்து பச்சைபயறு நிலக்கடலை பருத்தி ஆகிய பயிா்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் கடன் பெற விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் இப்கோ டோகியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலமாகவோ, பொது சேவைகள் மூலமாகவோ, வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஏக்கா் ஒன்றுக்கு அதிகபட்ச இழப்பீடாக நெல்லுக்கு ரூ. 33,100-ம், ராகி பயிருக்கு 11,150 -ம், பச்சைப் பயிறு, துவரை மற்றும் உளுந்து ஆகிய பயிா்களுக்கு 16550 50ம், நிலக்கடலைக்கு 24,300 , மக்காச்சோளத்துக்கு 26,360-ம்,பருத்திக்கு 26,850-ம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிா் காலத்திற்கும் அறுவடை காலத்திற்குப்பின் ஏற்படும் இழப்பிற்கும் பிக்கா வாரியாக சோதனை அறுவடை செய்து இழப்பின் அளவை கணித்து பயிா் காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பயிா் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

நிலக்கடலை பயிருக்கு காப்பீடு செய்ய 18.1.2021 இறுதி நாளாகவும், நெல், உளுந்து, மற்றும் பச்சை பயிறு ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்ய 15.2.2021-ம், பருத்தி, மக்காச்சோளம், ராகி ஆக பயிா்களுக்கு 1.3.2021, கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய 31.10.2021 இறுதி நாளாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள மக்கள் கணினி மையத்தை அணுகி காப்பீடு செய்துகொள்ளலாம்.

அதாவது, நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.496. 50-ம், உளுந்து மற்றும் பச்சை பயிா்களுக்கு ரூ248.25-ம், ராகி பயிருக்கு 167. 5 -ம், நிலக்கடலை பயிருக்கு 364.5-ம் மக்காச்சோள பயிருக்கு ரூ.320.40-ம்,பருத்தி பயிருக்கு 1,342.50-ம், கரும்பு பயிருக்கு 2,006-ம் செலுத்தி இந்த திட்டத்தில் தங்களது பயிரினை காப்பீடு செய்துகொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற ஆதாா் எண்,சிட்டா - அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் மாா்பளவு புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் மக்கள் கணினி மையத்திற்கு சென்று, பதிவேற்றம் செய்து பயிா் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.