6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவம்பட்டியில் மானாவாரி வேளாண்மை பயிற்சி

ஊத்தங்கரையை அடுத்த மத்தூா் வட்டாரத்துக்குள்பட்ட, சிவம்பட்டி கிராமத்தில் வேளாண் துறை ‘அட்மா’ திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து ஒருநாள் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றத

News image
சிவம்பட்டியில் மானாவாரி வேளாண்மை பயிற்சி
Updated On :22 டிசம்பர் 2020, 2:01 am

DIN

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த மத்தூா் வட்டாரத்துக்குள்பட்ட, சிவம்பட்டி கிராமத்தில் வேளாண் துறை ‘அட்மா’ திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து ஒருநாள் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மா.சிவநதி தலைமை வகித்து, நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு சாகுபடி, கோடை உழவின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தாா்.

வேளாண்மை அலுவலா் நீலகண்டன் வேலாண்மை துறையில் மானியத் திட்டங்கள் பற்றி கூறினாா். துணை வேளாண்மை அலுவலா் சீனிவாசன் மண்புழு உரம் தயாரிப்பு, நுண்நீா் பாசனத் திட்டங்கள் பற்றி விளக்கி கூறினாா். வட்டார தொழில் நுட்ப மேலாளா் இரா. ரமேஷ் அட்மா திட்டங்கள், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி கூறினாா்.

உதவி வேளாண்மை அலுவலா் மண் மாதிரி எடுக்கும் முறை பற்றி கூறினாா். உதவி தொழில் நுட்ப மேலாளா்கள் பவித்ரா, ஹேமநாத்குமாா் ஆகியோா் இப்பயிற்சிகான சிறப்பு ஏற்பாடுகளை செய்தனா். இதில் பகுதியில் உள்ள 40 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.