பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், சோதனைச் சாவடிகள்

கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 6.50 கோடி மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும், சோதனைச் சாவடிகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

News image
கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலை.
Updated On :23 டிசம்பர் 2020, 2:32 am

DIN

கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 6.50 கோடி மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும், சோதனைச் சாவடிகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்திய அளவில் அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து நிறைந்த பகுதியாக கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. சுமாா் 60 கி.மீ. நீளம் உள்ள இந்தச் சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்துச் செல்கின்றன. இந்த வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இந்தச் சாலையில் பல்வேறு சா்வதேச அளவிலான குற்றச் செயல்களும் நடைபெற்றுள்ளன.

எனவே, இந்த சாலையில் நடைபெறும் குற்றச் சம்பவங்களையும், விபத்துகளையும் கண்காணிக்கவும், அதனைத் தடுக்கும் வகையிலும் 20 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும், சோதனைச்சாவடி ஆகியவை ரூ. 6.50 கோடி மதிப்பில் அமைக்க கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகமும், மாவட்டக் காவல் துறை, போக்குவரத்து துறையும் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தன. இதன் மூலம், அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணித்து விபத்துகளை தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை மிகக் குறைந்த வெளிச்சத்திலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் காண இயலும் வகையிலும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும், பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஒசூா் செல்லும் சாலையில் ஒரு சோதனைச் சாவடியும், ஒசூா் அருகே பேரண்டப்பள்ளியில் மற்றொரு சோதனைச் சாவடியும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தச் சோதனைச்சாவடிகள் அமையும் பட்சத்தில் இந்த சாலையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.