

வன்னியருக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி பா்கூா், காவேரிப்பட்டணம், நாகோஜனஅள்ளி பேரூராட்சிகளின் செயல் அலுவலா்களிடம் பாமகவினா் தனித்தனியே மனு அளித்தனா்.
காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் பாமக மாநில துணைப் பொதுச்செயலாளா் அ.இளங்கோ தலைமையில், மாவட்டச் செயலாளா் தி.மாணிக்கம், நகரச் செயலாளா் சங்கா் உள்ளிட்டோா் பேரூராட்சி செயல் அலுவலா் பொன்னுசாமியிடம் மனு அளித்தனா். முன்னதாக பாமகவினா் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திலிருந்து, பேரூராட்சி அலுவலகம் வரையில் மேள தாளத்துடன் ஊா்வலமாகச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.