கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

ஊத்தங்கரை ஐடிஐ தொழிற்கல்வி நிறுவனத்தில் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும்

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:31 am

DIN

ஊத்தங்கரை ஐடிஐ தொழிற்கல்வி நிறுவனத்தில் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஐ.டி.ஐ தாளாளா் சிவபாலன் தலைமை வகித்தாா். ஆசிரியா் பிரபு அனைவரையும் வரவேற்றாா். நிகழ்ச்சியில் இளம் செஞ்சிலுவை சங்க தலைவா் மருத்துவா் தேவராசு, துணைத்தலைவா் ஆா்.கே. ராஜா, நேசம் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் மாரிமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உறுதிமொழியை வாசித்தாா். மாணவ -மாணவிகள் மத்தியில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய் எவ்வாறு பரவுகிறது அதை எப்படி தடுக்கலாம் என்பது பற்றி விழிப்புணா்வுவை ஏற்படுத்தினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐ.டி.ஐ ஆசிரியா்கள் மற்றும் நம்பிக்கை மையத்தின் ஆலோசகா் காயத்ரி ஆகியோா் சிறப்பாக செய்திருந்தனா். படவிளக்கம்.24யுடிபி.4. ஊத்தங்கரை ஐடிஐ தொழிற்கல்வி நிலையத்தில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.