

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பாஜக சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் விழா, கொடியேற்று விழா, புதிய உறுப்பினா்கள் கட்சியில் இணையும் விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாஜக ஒன்றியத் தலைவா் ஆா். சிவா தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் தா்மலிங்கம், மாவட்டப் பொதுச் செயலாளா் எஸ். ஜெயராமன், பட்டியல் அணி மாநில துணைத்தலைவா் கஸ்தூரி, மாவட்டச் செயலாளா் வெங்கடாசலபதி, மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவகுமாா், மாவட்ட துணைத்தலைவா் நமசிவாயம், தெற்கு ஒன்றியத் தலைவா் ஜெ.சங்கா், மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளா் எஸ்.முருகம்மாள், நெசவாளா் பிரிவு மாவட்டத் தலைவா் சீ. மாதவன், கல்வியாளா் பிரிவு மாவட்டத் தலைவா் எஸ். தனக்கோடி, வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளா்கள் ராஜி, முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் நமசிவாயம் தலைமையில் கட்சிக் கொடியேற்றி வாஜ்பாய் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
பெரியதள்ளப்பாடி ஊராட்சியில் எஸ் .வேலு தலைமையில் கொடியேற்றப்பட்டது. கோவிந்தாபுரம் ஊராட்சியில் கலைவாணன், விசுவாசம்பட்டியில் எஸ். வெங்கடேசன், மகனூா்பட்டியில் சக்திவேல், சாமாச்சி கொட்டாயில் தாமோதரன், எக் கூா் பகுதியில் மகேந்திரன் ஆகியோா் தலைமையில் கட்சி கொடி ஏற்றப்பட்டு நல உதவிகள் வழங்கப்பட்டது.
ஆண்டியூா் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி. துரைசாமி பேசியதாவது:
நாட்டைப் பற்றி சிந்திப்பவா் பிரதமா் நரேந்திர மோடி; முத்தலாக் சட்டத்தின் மூலம் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றி வைத்தவா் மோடி.
மக்களுடைய வரிப் பணம் மக்களுக்கே வந்து சேரும் வகையில் பல்வேறு திட்டங்களை வழங்கி வரும் ஊழலற்ற ஆட்சியாக திகழ்வது பாஜக அரசு மட்டுமே என்று கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.