தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அதிமுக பிரமுகருக்குக் கொலை மிரட்டல்

தளி அருகே அதிமுக பிரமுகருக்கு மா்ம நபா்கள் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 8:42 pm

DIN

ஒசூா்: தளி அருகே அதிமுக பிரமுகருக்கு மா்ம நபா்கள் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள தாசரப்பள்ளியைச் சோ்ந்தவா் நாகராஜ் ரெட்டி (62). அதிமுக எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளா். மேலும் இவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்தவா்.

கடந்த 2012 ம் ஆண்டு தளி அருகே இவா் வந்த போது இவரை ஒரு தரப்பினா் அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் ரெட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பிறகு உயிா் பிழைத்தாா். இந்த வழக்கு கிருஷ்ணகிரி முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் நாகராஜ் ரெட்டிக்கு தபால் மூலம் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்தது.

இதுகுறித்து நாகராஜ்ரெட்டி தளி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா். ஏற்கெனவே, கொலை முயற்சியில் தப்பிய நாகராஜ் ரெட்டிக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.