நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:28 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட குழுக் கூட்டம், தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.மாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளா் ஏ.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அனைத்து வழித்தடங்களிலும் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அனைத்துத் தொகுதிகளிலும் கோரிக்கை மாநாட்டை நடத்துவது, மத்திய, மாநில அரசுகளின் மக்களின் விரோதக் கொள்கைகளைஎதிரித்து, தருமபுரி மாவட்டத்தில் டிச.28 முதல் 31-ஆம் தேதிவரையில் 300 இடங்களில் மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.