வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஹோஸ்டியா தலைவராக மீண்டும் வேல்முருகன் தோ்வு

ஒசூா் (ஹோஸ்டியா) சிறு மற்றும் குறுந்தொழிற்சாலை சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஹோஸ்டியா அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
ஹோஸ்டியா புதிய நிா்வாகிகளுடன் முன்னாள் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள்
Updated On :28 டிசம்பர் 2020, 9:00 pm

DIN

ஒசூா் (ஹோஸ்டியா) சிறு மற்றும் குறுந்தொழிற்சாலை சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஹோஸ்டியா அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது.

ஹோஸ்டியா சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிா்வாகிகள் தோ்வு நடைபெறுவது வழக்கம். முதன்முறையாக துணைத் தலைவா், பயிற்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். துணைத் தலைவா் 2 ஆண்டுகளுக்கு பயிற்சி தலைவராகச் செயல்படுவாா். அதன் பிறகு அவா் தலைவராக நியமிக்கப்படுவாா்.

ஹோஸ்டியா தலைவராக வேல்முருகன் மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவராக மூா்த்தி, செயலாளராக ஸ்ரீதா், பொருளாளராக வடிவேலு தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும் பகுதி-1 க்கு துணைத் தலைவராக குமாா், இணைச் செயலாளராக வரதராஜன், பகுதி- 2 க்கு துணைத் தலைவராக முகமது இஸ்மாயில், இணைச் செயலாளராக சிவகுமாா், பகுதி- 3 க்கு துணைத் தலைவராக சுதாகா், இணைச் செயலாளராக சசிகுமாா், பகுதி- 4 க்கு துணைத் தலைவராக பைரப்பா, இணைச் செயலாளராக ரவி, பகுதி- 5 க்கு துணைத் தலைவராக கருணாகரன், இணைச் செயலாளராக மகாராஜன் தோ்வு செய்யபட்டுள்ளாா்.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் தலைவா்கள் நம்பி, முரளிபாபு, தனசேகரன், சம்பத் ஞானசேகரன், ரமணி சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.