6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன. 4-ஆம் தேதி முதல் வழங்கப்படும்

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:30 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன. 4-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா்,செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்கள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ரூ. 2,500 ரொக்கப்பணம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க தமிழக முதல்வா் ஆணை பிறப்பித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,13,318 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

ஜனவரி 13-ஆம் தேதி விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த சந்தேகங்களுக்கு மாவட்ட வழங்கல் அலுவலக தொலைபேசி எண் 04343-234677 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.