தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஊத்தங்கரையில் அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜி கணேசனின் 19ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜி கணேசன் 19ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2020, 7:44 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜிகணேசன் 19ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அத்துடன் காமராசரின் 118ஆவது பிறந்தநாள் விழாவும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் இ.சையத்நாசர் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் பூபதி, தமாகா மாவட்ட செயலாளர் செல்வராஜ் தாமாக நகர தலைவர் ஜெய்சங்கர், அரிமா நகுலன், சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர்கள் முகமது உஸ்மான், சின்னசாமி, கோவிந்தசாமி, சையத் அஹமத், காங்கிரஸ் நிர்வாகி அண்ணாதுரை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முன்னதாக முனியப்பன் கோவில் அருகில் உள்ள சிவாஜிகணேசன்,காமராசர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் சிவாஜி மன்ற நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.