புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கர்நாடக அணைகளில் நீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :21 ஜூலை 2020, 8:03 am

DIN

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் குடகு மாண்டியா, சாம்ராஜ் நகர் மற்றும் கேரளாவின் வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் மற்றும் ஹேராங்கி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடக அணைகளான கபினியில் இருந்து நொடிக்கு 1500கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நொடிக்கு4722 கன அடி தண்ணீர் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. 

மேலும் தமிழக -காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் திங்கள் கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 5,500 கன அடியாக வந்த கொண்டிருந்த நிலையில் , செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 6,500 கனஅடியாக அதிகரித்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருந்தது. மேலும் 11 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து நொடிக்கு 7 ஆயிரம் கன அடியாக தண்ணீர் தற்போது வந்து கொண்டிருக்கிறது. 

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவி, மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்கானித்து வருகின்றனர். கர்நாடக அணைகளின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.