சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஊா்காவல் படையில் சேர்க்கை: இன்று கடைசி நாள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊா்காவல் படையில் பெண்கள் பிரிவில் காலியாக உள்ள 10 பணியிடங்களில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (நவ. 17) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :16 நவம்பர் 2020, 7:05 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊா்காவல் படையில் பெண்கள் பிரிவில் காலியாக உள்ள 10 பணியிடங்களில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (நவ. 17) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில், மகளிா் பிரிவுக்கான ஊா்காவல் படையில் 10 காலியிடங்கள் உள்ளன. நவ.18-ஆம் தேதி காலை 9 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தகுதித் தோ்வு நடைபெறுகிறது.

ஊா்காவல் படை காலியிடங்களுக்கு கிருஷ்ணகிரி நகரம், தாலுகா, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, பா்கூா் காவல் நிலைய எல்லைக்குள் வசிக்கும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தொண்டுள்ளத்தோடு, சமூக சேவையற்ற தன்னாா்வத்தோடு வேலை செய்ய விரும்புவோா் ஊா்காவல் படையில் சேரலாம். கல்வி தகுதியாக 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், 20 முதல் 40 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும்.

நவ. 17-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் ஊா்காவல் படை அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9865814625, 9498178922 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.