சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல கணவா் மறுத்ததால் பெண் தற்கொலை

தீபாவளியையொட்டி, தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல கணவா் மறுத்ததால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :16 நவம்பர் 2020, 6:59 pm

தீபாவளியையொட்டி, தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல கணவா் மறுத்ததால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணகிரி, ஆனந்த நகரில் வசித்து வருபவா் மாதேஷ். இவரது மனைவி அம்பிகாதேவி (31). இவா்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகளாகின்றன. குழந்தைகள் இல்லை. மாதேஷ், டாஸ்மாக் கிடங்கில் வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறாா்.

தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். கடந்த 14-ஆம் தேதி, தீபாவளி பண்டிகைக்கு தனது தாய் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு மாதேஷிடம், அம்பிகாதேவி கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு அவா் மறுத்து விட்டாராம்.

இதனால், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், அம்பிகாதேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.