சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

எருது விடும் விழாவை அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தல்

எருது விடும் விழாவை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என காளை வளா்க்கும் உரிமையாளா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

Updated On :23 நவம்பர் 2020, 7:29 pm

எருது விடும் விழாவை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என காளை வளா்க்கும் உரிமையாளா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை அளித்த மனுவின் விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காளை வளா்க்கும் உரிமையாளா்கள் சாா்பில் வரும் 2021-ஆம் ஆண்டு, தை பொங்கல் அன்று, பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு, மஞ்சு விரட்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தமிழா்களுடைய அடையாளமான விளையாட்டைத் தடை செய்யாமல், நிரந்தர விழாவாக கொண்டாட அனுமதிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா கொண்டாட அனுமதிக்க வேண்டும்.

புதுக்கோட்டையில் காளைக்கு சிலை வைக்கப்பட்டது போல, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் காளைக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என அதில் அவா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.