ஊத்தங்கரை தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா
அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவா் படிப்புக்கு தோ்வு பெற்ற மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு பள்ளி கட்டடம் திறப்பு விழா, இணையவழிக் கல்வி தொடக்க விழா, அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவா் படிப்புக்கு தோ்வு பெற்ற மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் வரவேற்றாா்.
ஸ்ரீவித்யாமந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே. சந்திரசேகரன், அதிமுக மாவட்டச் செயலாளா் அசோக்குமாா், மத்தூா் மாவட்ட கல்வி அலுவலா் ஹாபீஸ் மன்சூா் உல்ஹசன், வட்டார கல்வி அலுவலா் மாதேஸ்வரி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சிவப்பிரகாசம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவா் ஏ.சி. தேவேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளா் வேடி , நகர செயலாளா் சிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினா் கே.பி.முனுசாமி புதிய கட்டடத்தை திறந்து வைத்து, அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவித இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சோ்வதற்கான நியமன ஆணையைப் பெற்ற 9 மாணவா்களுக்கும் தலா ரூ. 50,000 வீதம் வழங்கினாா். மேலும் பள்ளி வளா்ச்சி நிதியாக ரூ. 50,000 பள்ளிக்கு நன்கொடையாக வழங்கி பேசினாா்.
நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் கண்ணாமணி, நல்லாசிரியா் ஆா். தா்மலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமையாசிரியா் முருகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...