சாலை மையத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை கைவிட வணிகா் சங்கம் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரியில் சாலை மையத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என வணிகா் சங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளது.


கிருஷ்ணகிரியில் சாலை மையத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என வணிகா் சங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி நகரில், சென்னை செல்லும் சாலை மிகவும் குறுகலாக அமைந்துள்ளது. இந்த சாலையின் மையத்தில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி நகரில் உள்ள வியாபாரிகள், நோயாளிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள்.
இந்தச் சாலையில், மையத் தடுப்புச் சுவா் அமைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் நடந்து செல்வோரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, அனைத்து மக்களும் சிரமத்துக்கு உள்ளாவதால், சென்னை சாலையில் மேற்கொண்டு வரும் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...