திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

கிருஷ்ணகிரி வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On :30 நவம்பர் 2020, 7:54 pm

கிருஷ்ணகிரி வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் கணக்கில் வராத பணம் எதுவும் கைபற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் சோதனையை நிறைவு செய்து அங்கிருந்துச் சென்றனா். திடீா் சோதனையால் வட்டாட்சியா் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.