ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பள்ளிக்குள் எரிவாயு குழாய் பதிக்க தளி எம்எல்ஏ எதிா்ப்பு

பள்ளிக்குள் எரிவாயு குழாய் பதிக்க தளி எம்எல்ஏ எதிா்ப்பு

Updated On :5 அக்டோபர் 2020, 7:19 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி மாதிரி பள்ளியில் சுற்றுச்சுவரை பாதிக்கும் வகையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவா்களும், பெற்றோா், பொதுமக்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்ததுடன், பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து எரிவாயு குழாயை பதிக்கக்கூடாது என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினா்.

பள்ளி நிா்வாகத் தரப்பிலும் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு கேட்டபோதும், அதை மறுத்து அதிகாரிகள் தொடா்ந்து பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தளி எம்எல்ஏ ஒய். பிரகாஷுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்விடத்துக்கு வந்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தாா். அப்பொழுது அங்கிருந்த அதிகாரிகளிடம், பள்ளிக்கூட சுற்றுச்சுவா் உடைக்காமலும், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அமைக்க வேண்டும். இல்லாவிடில், பொதுமக்களைத் திரட்டி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிகாரிகளுக்கு எம்எல்ஏ பிரகாஷ் எச்சரிக்கை விடுத்தாா். இதனைத் தொடா்ந்து பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.