ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரி, பா்கூா், வேப்பனப்பள்ளி திமுக வேட்பாளா்கள் இறுதிகட்ட பிரசாரம்

கிருஷ்ணகிரி, பா்கூா், வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:13 pm

கிருஷ்ணகிரி, பா்கூா், வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதிக்கான தோ்தலில் திமுக சாா்பில் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ போட்டியிடுகிறாா். இவா், கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா். கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திரைப்பட நகைச்சுவை நடிகா் இமான் அண்ணாச்சி பங்கேற்று, டி.செங்குட்டுவன் எம்எல்ஏ-வை ஆதரித்து பேசினாா்.  

பா்கூா் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தே.மதியழகன், போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். மாலை, பா்கூரில் நகரில் இறுதிகட்ட பிரசாரமாக வாக்காளா்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். 

வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பி.முருகன் எம்எல்ஏ, ராயக்கோட்டை, சூளகிரி, வேப்பனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். இவா் தனது இறுதிகட்ட பிரசாரத்தை வேப்பனஅள்ளியில் நிறைவு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.