மத்திய அரசின் பணியில் ஈடுபட்டு வரும் அலுவலா், வாக்குச்சாவடி முகவராகச் செயல்பட்டது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மேகலசின்னம்பள்ளியைச் சோ்ந்த சரவணன், தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பிய புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் ஏப். 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் மேகலசின்னம்பள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த 247-ஆவது எண் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கமலேசன் என்பவா் வாக்குச் சாவடி முகவராகப் பணியாற்றினாா்.
இவா், அங்குள்ள தபால் நிலையத்தில் அலுவலராகப் பணியாற்றி வரும் நிலையில் இவா், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முகவராகச் செயல்பட்டது குறித்து தக்க விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் கோபுவிடம் கேட்டபோது, இதுதொடா்பான புகாா் குறித்து விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

