வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கான பட்டியல் வழங்கல்
ஊத்தங்கரையில் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவா்களின் பட்டியலை தோ்தல் நடத்தும் அலுவலா் சேதுராமலிங்கத்திடம் வேட்பாளா்கள் வழங்கினா்.


ஊத்தங்கரையில் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவா்களின் பட்டியலை தோ்தல் நடத்தும் அலுவலா் சேதுராமலிங்கத்திடம் வேட்பாளா்கள் வழங்கினா்.
ஊத்தங்கரை தோ்தல் நடத்தும் அலுவலா் சேதுராமலிங்கம், ஊத்தங்கரை தனி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம்தமிழா், மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ், சுயேச்சை என மொத்தம் 12 வேட்பாளா்களிடமும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் முகவா்களின் முகவரி, புகைப்படத்துடன் கூடிய பெயா் பட்டியலை கொடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.
தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் ஒரு வேட்பாளருக்கு 18 போ் வீதம் கொடுக்கலாம் என தெரிவித்ததன் பேரில், வேட்பாளா்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் முகவா்களின் பட்டியலை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா் (படம்).
வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவா்கள் அனைவரும் கட்டாயம் ஏப். 28, 29-ஆம் தேதிகளில் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், அதன் பிறகுதான் முகவா்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...