தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மிட்டப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

 ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:04 pm

DIN

 ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரக் குழு உறுப்பினா் தங்கபாலு தலைமை வகித்தாா். மாற்றுத் திறனாளிகள் குமாா், பூசை, அண்ணாமலை, குமாா், இளவரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் துணைச் செயலாளா் எத்திராஜ், வட்டாரத் தலைவா் வெங்கடாசலம் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

இதில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பராமரிப்பு உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.