கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இடது மற்றும் வலது புற பிரதான கால்வாய்களில் நிகழ்வானது இரண்டாம் போகபாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார்.
இதன்படி 9,012 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் 28.04. 2022. வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 87 கன அடியும், இடது புற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கன அடி வீதமும் ஆக மொத்தம் விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன்படி கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பெரிய முத்தூர், தளி அள்ளி, எர்ரஅள்ளி, மாரிசெட்டிஅள்ளி, சுண்டே குப்பம், கால்வே அள்ளி, பெண்ணேஸ்வரமடம், நாகோஜனஅள்ளி, திம்மாபுரம், குண்டலபட்டி, காவேரிப்பட்டிணம் , ஜனப்பரஅள்ளி, செனட்டஅள்ளி, மிட்ட அள்ளி, பாலேகுளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும்.
விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமென விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி செங்குட்டுவன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

