எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கிருஷ்ணகிரி அருகே நின்றிருந்த அரசு பேருந்து மீது கார் மோதல்: 6 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் சாலையோர தேநீர் கடையில் சேலத்தில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் அரசு பேருந்து இன்று அதிகாலை நின்றுகொண்டிருந்தது.

News image
விபத்துக்குள்ளான கார்.
Updated On :1 பிப்ரவரி 2021, 7:01 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் சாலையோர தேநீர் கடையில் சேலத்தில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் அரசு பேருந்து இன்று அதிகாலை நின்றுகொண்டிருந்தது.

Story image

உயிரிழந்த பவானியை சேர்ந்த நான்கு இளைஞர்கள்
 
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆம்னி கார் நின்றிருந்த பேருந்தின் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஐந்து ஆண்களும், பேருந்திலிருந்து கீழே இறங்கி நின்று கொண்டிருந்த ஒரு ஆண் பயணியும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

Story image

காரில் பயணம் செய்தவர்கள் ஈரோடு மாவட்டம், பவானி சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் பெங்களூர் ஒண்டர்லாவிற்கு சுற்றுலா சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பவானியைச் சேர்ந்த கௌதம், பரணி, அசோக் ஆகியோர் காயமடைந்தனர்.

Story image

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. பேருந்து பயணி, கோபிசெட்டிபாளையம், கோபி பிரதான சாலையை சேர்ந்த தேவராஜ் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.