வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:52 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில், கடந்த ஆண்டு மாா்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், படிப்படியாக பொது முடக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.

இதில், மின்வசதி, வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 170 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் தகுதியான மனுக்களைக் கண்டறிந்து, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 25 பயனாளிகளுக்கு விலையில்லா செல்லிடப் பேசிகள் என மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ. 3.67 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

புன்னகையைத் தேடி முகாம்: முன்னதாக சமூகப் பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் பிப்.1 முதல் பிப்.15-ஆம் தேதி வரை நடைபெற உள்ள புன்னகையைத் தேடி-2021 முகாமை கொடியசைத்து, மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் அமீா்பாஷா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் மகிழ்நன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.