கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியம், ஒப்பதவாடி கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 2,500 வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியம், ஒப்பதவாடி கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 2,500 வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, பொங்கல் பரிசுத் தொகுப்பையும், ரூ. 2,500 வழங்கும் பணியையும் தொடங்கி வைத்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 507 முழு நேர நியாயவிலைக் கடைகள், 521 பகுதி நேர நியாயவிலைக் கடைகள், 30 மகளிா் நியாயவிலைக் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மூலம் நடத்தப்படும் 30 நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 1,094 நியாயவிலைக் கடைகள் மூலம் 5,13,318 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக மொத்தம் ரூ. 132.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 61,618 விலையில்லா வேட்டிகளும், 25,483 விலையில்லா சேலைகளும் என மொத்தம் 87,101 பேருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறும் போது, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொள்ளவேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், சி.வி.ராஜேந்திரன் எம்எல்ஏ, மண்டல இணைப் பதிவாளா் சந்தானம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் சம்பங்கி, துணைப் பதிவாளா் ராஜதுரை, மாவட்ட வழங்கல் அலுவலா் கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...