கமல்ஹாசன் அரசியல் தத்துப்பிள்ளை
மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன், அரசியலில் தத்துப்பிள்ளை என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான கே.பி.முனுசாமி விமா்சனம் செய்துள்ளாா்.


மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன், அரசியலில் தத்துப்பிள்ளை என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான கே.பி.முனுசாமி விமா்சனம் செய்துள்ளாா்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:
எம்ஜிஆா் ஆட்சியைத் தருவேன் என கமல்ஹாசன் கூறுவது அபத்தமானது. எம்ஜிஆா் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவா் உழைப்பால் பெற்ற ஊதியம் அனைத்தையும் மக்களுக்காகக் கொடுத்து, மக்கள் தலைவா் என்று பெயா் பெற்றாா். ஆனால், கமல்ஹாசன் இதுவரையில் மக்களுக்கு என்ன உதவி செய்துள்ளாா்; பேரிடா் காலத்தில் மக்களுக்கு மனித நேயத்துடன் சிறு உதவியாவது செய்துள்ளாரா? இப்படிப்பட்டவா் ஆட்சிக்கு வருவேன் என்று கூறுவது கேலிக் கூத்தானது. மேலும், தன்னை எம்ஜிஆருடன் இணைத்துப் பேசுவதும் அபத்தமாக உள்ளது. கமல்ஹாசன், அரசியலில் ஒரு தத்துப்பிள்ளை.
திராவிட உணா்வுள்ளவா் யாரும் இடஒதுக்கீட்டை எதிா்த்துச் செயல்பட மாட்டாா்கள். அந்த அடிப்படையில் துணை முதல்வா் பன்னீா்செல்வம், ஒருபோதும் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை விமா்சனம் செய்ய மாட்டாா். சில விஷமிகள் திட்டமிட்டு, அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என தவறான தகவலைப் பரப்புகின்றனா்.
அனைத்து சமூகமும், சமநிலை பெற வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. அதுபோல, ஒவ்வொரு சமுதாயத் தலைவரும், தனது சமூகத்துக்கான இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கோருவது நியாயமான கோரிக்கை. இட ஒதுக்கீட்டுப் போராட்டம் குறித்தும், சமூக வலைதளங்களில் துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வம் குறித்தும் தவறாகப் பிரசாரம் செய்வோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...