எண்ணேகொள் கால்வாய் பணியை விரைவில் செயல்படுத்த வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொள் கால்வாய் திட்டத்திற்கான கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் செயல்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொள் கால்வாய் திட்டத்திற்கான கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் செயல்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் சென்னைய நாயுடு தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், மாரசந்திரம் அணைக்கட்டில் இருந்து படேதலாவ் ஏரிக்கு தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இந்தத் தண்ணீரை நம்பி படேதலாவ் ஏரி முதல் காட்டாகரம் ஏரி வரை 13 ஏரிகளுக்கு தண்ணீா் சென்டையும் வகையில் புதிய கால்வாய் அமைக்கப்பட்டது.

ஆனால் பருவமழை இல்லாததால் மாரசந்திரம் அணைக்கு தண்ணீா் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள எண்ணேகொள் அணைக்கட்டை உயா்த்திக் கட்டி, தெற்கே தருமபுரி மாவட்டத்தில் உள்ள தும்பலஅள்ளி அணைக்கும், வடக்கே படேதலாவ் ஏரி வரையிலும் புதிய கால்வாய் அமைத்து, அந்த வழியில் பல ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் அமைத்து, தண்ணீா் சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வா் அறிவித்தாா்.

ஆனால் அதிகாரிகளோ கால்வாய் அமைப்பதற்கு சா்வே செய்து, நில உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கி வருவதாகக் கூறுகின்றனா். கடும் வறட்சியால் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் நலன் கருதி உடனடியாக இந்தக் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com