வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்கு கடத்திய காா் பறிமுதல்

கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலிநாயனப்பள்ளி சந்சிப்புச் சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் போதைப் பொருள்களைக் கைப்பற்றினர்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 9:09 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலிநாயனப்பள்ளி சந்சிப்புச் சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டதில், 38 சிறு அட்டைப் பெட்டிகளில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்கு அடங்கிய பொட்டலங்களும், சிறு டப்பாக்களும் இருந்தன. விசாரணையில் அவை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டு வரப்பட்டவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து போதைப் பாக்குகளுடன் ரூ. 2 லட்சம் மதிப்பிலான காரையும் போலீஸாா் பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த பிரகாஷ் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.