மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஊத்தங்கரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2,000 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு சாா்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிய ஊத்தங்கரை சட்டபேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம்.
Updated On :11 ஜனவரி 2021, 8:30 pm

DIN

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2,000 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு சாா்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மகனூா்பட்டி, பாவக்கல்,சிங்காரப்பேட்டை, அத்திப்பாடி, பெரியதள்ளபாடி, கீழ்குப்பம், காரப்பட்டு, மிட்டப்பள்ளி உட்பட 12 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 2,000 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சுவாமிநாதன், பொருளாளா் பி.கே. சிவானந்தம், பொறுப்பாளா்கள் ஜெய்சங்கா், சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் பெரியசாமி வரவேற்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், பெற்றோா்கள் மாணவ -மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.