வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சாதி சான்றிதழ் வழங்கக் கோரி இருளா் இன மக்கள் மனு அளிப்பு

சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருள் இன மக்கள், திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருள் இன மக்கள், திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா்பதி இருளா் காலனியைச் சோ்ந்த இருளா் இன மக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக்தில் கோரிக்கை மனுவை அளித்தனா். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

மத்தூா்பதி, இருளா் காலனியில் 30 குடும்பத்தினா் 75 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு வழங்கிய குடியிருப்பானது மிகவும் சேதம் அடைந்துள்ளது. எனவே, புதிய வீடு கட்டித் தரவேண்டும். ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

எனவே, எங்களுக்கு தனி வீடுகளைக் கட்டித் தர வேண்டும். பல ஆண்டுகளாக, சாதி சான்றிதழ் கோரி வருகிறோம். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் குழந்தைகளின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.