நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் முழுத் திரைப்படமும் கடந்த வெள்ளிக் கிழமை (ஏப். 10) அதிகாலை இணையத்தில் வெளியானது.
இது குறித்து குசைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக 6 பேரை காவல் துறையினர் இன்று (ஏப். 12) கைது செய்தனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரின் ரசிகர்கள் கொண்டாடித்தீர்க்க ஆவலாக இருந்தனர். ஆனால், இப்போது முழுப்படத்தையும் பல லட்சம் பேர் பார்த்திருப்பார்கள் என்பதால் திரையரங்குகளில் வெளியானாலும் வணிக ரீதியான பாதிப்பை இப்படம் கண்டிப்பாக சந்திக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், இப்படத்தைத் தயாரித்த கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால் நடிகர் விஜய் அதே தயாரிப்பு நிறுவனத்தில் மீண்டும் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் அல்லது நெல்சன் ஆகியோர் இயக்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பின் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Summary
reports suggest that actor Vijay is likely to act again.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனுஷுக்கு ஜோடியாகும் நடிகை ப்ரீத்தி முகுந்தன்?

அஜித் - 64 திரைப்படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி?

கதாநாயகனாகும் ஜேசன் விஜய்! இயக்குநர் யார்?

ரூ. 100 கோடியாக சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூர்யா?
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai




