நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊத்தங்கரையில் 11வது தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

ஊத்தங்கரையில் 11 வது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணியை வட்டாட்சியா் பி. தண்டபாணி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:34 pm

DIN

ஊத்தங்கரையில் 11 வது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணியை வட்டாட்சியா் பி. தண்டபாணி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தோ்தல் துணை வட்டாட்சியா் அரவிந்தன், தனி வட்டாட்சியா் சம்பத், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜாக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்து கொண்டனா். இந்தப் பேரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கி ஊத்தங்கரை முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தும், தெருக்கூத்து நாடக கலைஞா் மூலமாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதா், கிராம நிா்வாக அலுவலா்கள், மற்றும் கிராம நிா்வாக உதவியாளா்கள், வருவாய்த் துறை ஊழியா்கள் என பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.