மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஓசூர் அருகே கெயில் குழாய்க்கு எதிர்ப்பு, குழியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

ஓசூர் அருகே விவசாய நிலத்தில் கெயில் நிறுவனம் எரிவாயுவு உருளை பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்குழிக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ஓசூர் அருகே கெயில் குழாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :10 ஜூலை 2021, 12:34 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே விவசாய நிலத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு உருளை பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்குழிக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கேரள மாநிலம் கொச்சின் பகுதியிலிருந்து பெங்களூருக்கு பைப் மூலம் எரிவாயுவை கொண்டுசெல்லும் பணிகள் 2011ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. அப்போதைய மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் விவசாய நிலத்தில் குழாய்கள் பதிப்பதை நிறுத்த உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் பணிகள் நிறுத்தப்பட்டது. 

பின்னர் விவசாயிகள் எரிவாயு உருளையை சாலை ஓரங்களில் கொண்டு செல்லலாம் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் கெயில் நிறுவனம் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது கூட பணி நடைபெற்றது. அப்போதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பணிகளை நிறுத்த உத்தரவிட்டதின் அடிப்படையில் பணி நிறுத்தப்பட்டது. 

ஆனால் அப்பணிகள் மீண்டும் நேற்று மாலை முதல் கெயில் நிறுவனம் தன்னுடைய வேலையை துரிதப்படுத்தியது. இதை அறிந்த விவசாயிகள் இன்று காலை ஓசூர் அருகே குந்துமாரனப்பள்ளி கிராமத்தின் அருகில் விவசாய நிலத்தில் கெயில் நிறுவனம் கேஸ் பைப்லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

Story image

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் பைப்லைன் குழாய் பதிக்கும் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் இளங்கோ மற்றும் காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விபத்து ஏற்படும் என்ற நோக்கத்தில் மழைக்காலம் என்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகளிடம் தெரிவித்தார். 

எனவே பைப் போடப்பட்டுள்ள இடத்தை மட்டும் மூடிக் கொள்ள அனுமதி வழங்குமாறு விவசாயிகளிடம் கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு விவசாயிகள் பைப்பை வெளியில் எடுத்த பின் மூடிக்கொள்ளட்டும் என்று தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமை நடைபெறும் ஆலோசனைக்கு பின் வேலையை தொடங்குமாறு கெயில் நிறுவனத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டதை அடுத்து அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.