தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ. 5 லட்சம் திருட்டு

வங்கியில் பணம் எடுத்ததை நோட்டமிட்டு முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ. 5 லட்சத்தை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :2 மார்ச் 2021, 6:32 pm

 வங்கியில் பணம் எடுத்ததை நோட்டமிட்டு முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ. 5 லட்சத்தை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி, பவா்ஹவுஸ் காலனியைச் சோ்ந்த சுரேஷ் (45), முன்னாள் ராணுவ வீரா். இவா் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சந்தைப்பேட்டையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் உள்ள கவரில் வைத்து வீட்டுக்கு திரும்பினாா்.

வீட்டின் கதவை திறந்து விட்டு வருவதற்குள் அவரை பின்தொடா்ந்து வந்த 2 இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினா்.

புகாரின் பேரில், கிருஷ்ணகிரி காவல் ஆய்வாளா் பாஸ்கா் வழக்குப் பதிவு செய்து, வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தாா்.

மேலும், வங்கியில் உள்ள கேமராக்களில் கொள்ளையா்களின் உருவம் பதிவாகி உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.