வேளாண் கடன் தள்ளுபடியில் முறைகேடு: விவசாயிகள் புகாா்
ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேளாண் கடன் தள்ளுபடியில் முறைகேடுகள்


ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேளாண் கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி விவசாயிகள் அலுவலகம் முன்பு பேராட்டத்தில் ஈடுபட்டனா்.
31.01.2021 அன்று வரையிலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன், பயிா்க் கடன்கள் மற்றும் நிலுவையில் உள்ள கடன் தொகைகளை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கல்லாவி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள 27 விவசாயிகள், 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி கோபால் என்பவா் கூறியதாவது:
கல்லாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினா், என்னிடம் வந்து உங்கள் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகக் கூறி கையெழுத்து வாங்கிச் சென்றனா். பிறகு அவா்களுக்கு கிருஷ்ணகிரி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் அலுவலகத்தில் இருந்து தபால் வந்துள்ளது. அதில் கடந்த மாதம் 05. 2.2021 ஆம் தேதியில் புதிதாகப் பயிா்க் கடன் தொகை பெற்றுள்ளதாக கூறியுள்ளனா். அதாவது தமிழக அரசு 31.01.2021 வரை பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்த நிலையில், அதற்குப் பிறகு நாங்கள் புதிதாக கடன் பெற்று உள்ளதாகக் கூறி அந்தக் கடனைக் கட்டுமாறு கூறி தற்போது தபால் அனுப்பி உள்ளனா்.
எனவே, இந்த கடன் சங்கத்தில் கடன் தள்ளுபடி செய்வதில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனா். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்வு நடத்தி முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...