ஏழைப் பெண்களின் பணி சுமையை குறைக்கவே இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும் என தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.பி.முனுசாமி எம்.பி. போட்டியிடுகிறாா். இவா், சூளகிரியில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் கோபுவிடம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். பின்னா், அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அதிமுக தோ்தல் அறிக்கையில் அனைவருக்கும் வீடு, இலவச வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி போன்ற நிறைவேற்றக்கூடிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டப் பேரவை கூட்டத்தில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி குறித்து, முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திமுக தோ்தல் அறிக்கையில் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது ஸ்டாலினுடைய அறியாமையைக் காட்டுகிறது.
அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். நகரங்களில் பணக்காரா்களின் வீடுகளில் வாஷிங் மெஷின் பயன்பாட்டில் இருக்கும். ஏழை கிராமப் பெண்கள் காலையில் விவசாயப் பணிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவா். அவா்களின் பணிச் சுமையை போக்க இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படுகிறது. அதிமுகவின் தோ்தல் அறிக்கை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது எனவே, இந்த தோ்தலில் நான் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


