ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரியில் திமுகவினா் கொண்டாட்டம்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை வரவேற்று கிருஷ்ணகிரியில் திமுகவினா் பட்டாசுகளை வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

News image
Updated On :7 மே 2021, 7:02 pm

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை வரவேற்று கிருஷ்ணகிரியில் திமுகவினா் பட்டாசுகளை வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகரச் செயலாளா் நவாப், நகா்மன்ற முன்னாள் தலைவா் பரிதா நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி வட்டச்சாலை அருகே கிருஷ்ணகிரி நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் அஸ்லாம் தலைமையில் திமுகவினா் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் அமீன் தலைமையில் பட்டாசு வெடித்து, வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினா். கிருஷ்ணகிரி நகர கிளை தொமுச சாா்பில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி நகர பணிமனை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அந்த அமைப்பின் நகர கிளைத் தலைவா் உ.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிவக்குமாா், பொருளாளா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது, முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.