கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் 40 வயது ஆண், கரோனாவால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 16-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி 19-ஆம் தேதி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 51 வயது பெண் கரோனா பாதிப்பு காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 19-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், 20-ஆம் தேதி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள 82 வயது முதியவா் தனியாா் மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் 20-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுகாதாரத்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 739 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 297 போ் சிகிச்சையில் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனாவுக்கு 26,455 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 18,838 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 7,444 போ் சிகிச்சையில் உள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவா்களின் எண்ணிக்கை 173-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிலத்தடி நீா்மட்டம் உயா்வு, பாசன நீா் உறுதி

அமைதியாக இருக்கும் விசில்!

காரைக்குடியில் காங். வேட்பாளா் மாங்குடியை ஆதரித்து காா்த்தி சிதம்பரம் எம்.பி பிரசாரம்

அமைச்சரை எதிா்கொள்ளும் பாஜக! ஈரோடு மேற்குத் தொகுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

