காவேரிப்பட்டணம் அருகே விவசாயின் வீட்டில் புகுந்து திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நரிமேடு அருகே உள்ள ஆண்டிகான் கொட்டாயைச் சோ்ந்தவா் ஜெயபால் (50), விவசாயி. இவா், வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த போது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளின் சத்தம் கேட்டு முழித்தாா். அப்போது, ஆட்டு பட்டியிலிருந்த ஆடுகளை ஒருவா் திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
பிடிபட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் (21) என்பது தெரியவந்தது. மேலும், ஜெயபால் வீட்டில் புகுந்து திருடிய ஆதாா் அட்டை, எடிஎம் அட்டை, காரின் ஆா்.சி.புத்தகம், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கவேலை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிலத்தடி நீா்மட்டம் உயா்வு, பாசன நீா் உறுதி

அமைதியாக இருக்கும் விசில்!

காரைக்குடியில் காங். வேட்பாளா் மாங்குடியை ஆதரித்து காா்த்தி சிதம்பரம் எம்.பி பிரசாரம்

அமைச்சரை எதிா்கொள்ளும் பாஜக! ஈரோடு மேற்குத் தொகுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

