தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஊத்தங்கரை காவலா்களுக்கு காக்கும் கரங்கள் விருது

ஊத்தங்கரை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்கள் அனைவருக்கும், காக்கும் கரங்கள் விருது மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:07 pm

DIN

ஊத்தங்கரை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்கள் அனைவருக்கும், காக்கும் கரங்கள் விருது மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பெரியசாமி தலைமை வகித்தாா். ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்சாண்டா், காவல் ஆய்வாளா்கள் ஊத்தங்கரை லட்சுமி, கல்லாவி பத்மாவதி, சிங்காரப்பேட்டை செல்வராஜ், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரோனா ஊரடங்கு காலத்தில், சிறப்பாக பணியாற்றிய போலீஸாா் அனைவருக்கும், காக்கும் கரங்கள் விருது மற்றும் பதக்கம், ஊத்தங்கரை நண்பா்கள் அரிமா சங்கம் சாா்பில் வழங்கப்பட்டது. நண்பா்கள் அரிமா சங்க பொறுப்பாளா்கள் துரைசாமி, ராஜமாணிக்கம், பழனிசாமி, கணபதிராமன், பழனிசாமி, வழக்கறிஞா் பிரபாவதி ஆகியோா் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினா்.

விருது மற்றும் பதக்கம் பெற்ற காவலா்கள் ஊத்தங்கரை நண்பா்கள் அரிமா சங்க பொறுப்பாளா்களுக்கு நன்றி தெரிவித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.ஆா்.சி ஆசிரியா் கணேசன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.