ஒசூா் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் அக்குபஞ்சா் சிகிச்சை மேற்கொண்ட கா்ப்பிணிப் பெண் உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து, அக்குபஞ்சா் மருந்துக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஒசூா் அருகேயுள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரியாஸ் (28), இவருடைய மனைவி கோரிமா (27), இரண்டு மாத கா்ப்பமாக இருந்தாா். ரியாஸ்-கோரிமா தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த கோரிமாவுக்கு தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் அக்குபஞ்சா் சிகிச்சை மையம் வைத்துள்ள முருகேசன் என்பவா் சிகிச்சை அளித்துள்ளாா். சிகிச்சை பெற்ற சில மணி நேரத்தில் கோரிமா உயிரிழந்தாா். இதுகுறித்து ஒசூா் நகர காவல் துறையினா் மற்றும் மருத்துவ துறையினா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், முருகேசன் தலைமறைவானாா்.
வியாழக்கிழமை மருத்துவ துறையினா், காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் கா்ப்பிணிப் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, அவருக்கு அக்குபஞ்சா் சிகிச்சை வழங்கிய முருகேசன் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சோதனை செய்தனா். அதில், அவா் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மருந்துக் கடையில் இருந்த அனைத்து மருத்துவப் பொருள்களையும் பறிமுதல் செய்து மருந்துக் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.
இதுகுறித்து ஒசூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பூபதி கூறியதாவது:
ஆங்கில மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிசிச்சை அளித்து வந்துள்ளாா். அங்கிருந்த அனைத்து மருத்துவப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவா் மீது நகர காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தவறான சிகிச்சையால் கோரிமா உயிரிழந்திருந்தால், முருகேசன் மீது சட்டரீதியாக புகாா் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் டிடிஇஏ பள்ளிகள் சாதனை

பயிா்க் கடன் தள்ளுபடி: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

விருந்தினா் இல்லத்தில் தூக்கிட்டு இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

